Skip to main content

அவள் -2



அவளால் செய்ய முடிந்த நல்ல விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?

தடித்த வார்த்தைகள் முட்களை போல
இன்னும் இன்னும் தைக்கின்றன.


மறக்க நினைக்கும் சண்டைகளுக்கூடான
நிகழ்வுகள் மட்டும் ரணமாகிக் கிடக்கின்றன.
அவளின் தவறுதான் என்ன?


மகிழ்ந்திருக்க ஒரு சிறு துரும்பு காரணமும்
கிடைக்காமல் தேடித்தேடி மனமே மனதை துளைக்கிறது.


கொஞ்சம் பேசி நெஞ்சம் மகிழ்ந்து
அயர்ந்து தூங்க ஆசை கொள்கிறது
அவள் மனது.

Comments

Popular posts from this blog

தண்ணீர் சுமக்க தயாரா?

  ரெபேக்காளை போல பலுகி பெருகனும், சீமாட்டியாக வாழனும்னு எல்லா பெண்களுக்கும் ஆசைதான். ஆனால் அதே ரெபேக்காளை போல ஊர் பேர் தெரியாத வழிப்போக்கருக்கும் அவர் ஒட்டகங்களுக்கும் சேர்த்து கிணற்றில் தண்ணீர் இரைக்க இன்று எத்தனை பேர் தயாராக இருப்பாங்க...,?!?? அவள் சோம்பி திரிபவள் அல்ல. குற்றம் குறை கூறி அலுத்துக் கொள்பவளும் அல்ல. ரெபேக்காள் தான் செய்யும் காரியங்களை மனதார செய்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார். இன்றைக்கு நாமும் நமக்கு நேரிடும் காரியங்களை முழுமனதோடு செய்கிறோமா?

அவள்

அவள் தனிமையில் இல்லை. அவள் செடிகளோடு பேச தெரிந்தவள். மலர்களின் மணத்தால் மனதை நிறைத்துக்கொள்பவள். துளிர்க்கும் சிறு அரும்பும் அவள் நம்பிக்கை போல செழித்து வளர்ந்தோங்குகிறது. பாத்திரங்களின் இரைச்சலில் அவள் விம்மலையும் கழுவும் தண்ணீரினூடே கண்ணீரையும் கரைத்து கடத்த முனைபவள். அவள் தனிமையில் இல்லை. வகுப்புத்தோழிகளின் நினைவுகளோடு தினமும் சிரிக்கிறாள். ஏதோ பாடல்களினால் செவிகளை நிறைத்துக் கொள்கிறாள். உள்ளம் உடைந்து வெடித்து கிளம்புகையில் தன் கைகளால் தன்னையே வளைத்து அணைத்துக் கொள்கிறாள். அவள் தனிமையில் இல்லை.