மழை இல்லாததால், அவள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவது எளிதாகிறது போல் தோன்றுகிறது. அவள் செடிகள் அதீத தண்ணீரினால் அழுகும் ஆபத்தில் இருந்து தப்பித்து கொள்கின்றன. மொத்த உலகத்திலும் சுவையான தண்ணீர் தன் ஊரில் தான் தாராளமாக கிடைக்கிறதென்று மெச்சிக்கொள்கிறாள். அருகில் காலி இடத்தில் உள்ள வேப்பமரத்து வேர் தண்ணீர் தொட்டிக்கு வினையாகிவிடுமோ என்றென்னி அதை வெட்டும் தன் வீட்டாரை பார்த்து ஏதோ நினைத்து கடந்து போகிறாள். அதற்கு முன் வெட்டப்பட்ட தென்னை, முருங்கை, கொய்யா மரமெல்லாம் கண் முன் வந்து போயின.
"Celebrating her strength, her stories, and her wisdom. A thoughtful corner of the internet curated entirely for women and everyone."